Thursday, 5 February 2015

சனிப் பெயர்ச்சி பலன்கள்

பொதுவாக சனி, ராகு, கேது, குரு ஆகியவர்களின் இட மாற்றம் மக்களால் பெரிதும் கவனிக்கப்படுகிறது. அதிலும் சனியின் இட மாற்றம் பல விதமான பய உணர்ச்சியுடன் கவணிக்கப்படுகிறது. அந்த பயத்தை பல பத்திரிகைகள் நன்கு  பயன் படுத்திக் கொள்கிறார்கள். ஒரு கிரகம் இடம் மாறி துன்பம் தரும் இடத்தில் இருந்தாலும் இன்னொரு கிரகம் தன் இட மாறுதலால் சில பல சமயங்களில் நல்ல பயனையே தரும் என்பதை நாம் உணர்ந்தோமானால் இந்த பயம் நமக்கு இருக்காது. இந்த ஆண்டு ஏற்பட்ட குருப் பெயர்ச்சி, ராகு /. கேது பெயர்ச்சி, சனி பெயர்ச்சி ஆகிய மூன்றையும் கணக்கில் கொண்டு  அனைத்தையும் கூட்டி கழித்து நிகர பலன் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. பயனடையுங்கள். பயப்படாமல் இருங்கள்.

அஸ்வினி,  மகம், மூலம் அக்கிய மூன்றும் கேதுவின் நக்ஷத்திரங்கள். அவை நெர்ய்ப்பு ராசிகளான மேஷம், சிம்மம், தனுசுவில் உள்ளன. சனியானவர் சில காலம் விசாகத்திலும், சில காலம் அனுஷத்திலும், சில காலம் கேட்டையிலும், சில காலம் மூலத்திலும் 2 1/2 ஆண்டு காலத்தில் பிரயாணம் செய்கிறார். பஞ்சாங்கத்தைப் பார்த்தால் இவர் பிரயாணம் செய்யும் நக்ஷத்திரம் நமக்குத் தெரியும். அவ்வாறு பிரயாணம் செய்யும் காலங்களில் அவர் விசாகத்திலும், மூலத்திலும் பிரயாணம் செய்யும் காலத்தில் அஸ்வினி, மகம், மூலம் ஆகிய மூன்று நக்ஷத்திரங்களுக்கும்  மிகவும் அதிகமான கெடுதலையே செய்கிறார். ஆனால் அனுஷம் நக்ஷத்திரத்தில் பிரயாணம் செய்யும்போது இவர்களுக்கு நன்மையை செய்கிறார். கேட்டை நக்ஷத்திரத்தில் பிரயாணம் செய்யும்போது அதிக அலவு நன்மைகளை செய்கிறார்.

பரணி, பூரம், பூராடம் அக்கிய மூன்று நக்ஷத்திரங்களில் பிறந்தவருக்கும் சனி  விசாகம், கேட்டை மூலம் ஆகிய நக்ஷத்திரங்களில் பயணம் செய்யும்போது நல்ல பலன் தரும் சனி அனுஷத்தில் பிரயாணம் செய்யும்போது கெடுதலைச் செய்கிறார்.

கார்த்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய சூரியனால் ஆலப்படும் மூன்று நக்ஷத்திரங்களில் பிறந்தவர்களுக்கு சனி அனுஷம், மூலம் அக்கிய நக்ஷத்திரங்களில் பயணம் செய்யும்போது நன்மைகளையும், விசாகம், கேட்டை அக்கிய நக்ஷத்திரங்களில் பிரயானம் செய்யும்போது தீமைகலையும் செய்கிறார்.

ரோஹிணி, ஹஸ்தம், திருவோணம் ஆகிய சந்திரனால் ஆளப்ப்டும் மூன்று நக்ஷத்திரங்களில் பிறந்தவர்களுக்கு சனி விசாகத்திலும் கேட்டையிலும் பிரயாணம் செய்யும்போது நன்மைகளையும், அனுஷம், மூலம் ஆகிய நக்ஷத்திரங்களில் பயணிக்கும்போது தீமைகலையும் செய்கிறார்.

மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய சூரியனின் நக்ஷத்திரங்களில் பிறந்தவர்களுக்கு சனி விசாகம், கேட்டை ஆகிய நக்ஷத்திரங்களில் பயணிக்கும்போது நன்மையையும் அனுஷம், மூலம் ஆகிய நக்ஷத்திரங்களில் பயணிக்கும்போது தீமையையும் செய்கிறார்.

திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய ராகுவால் ஆலப்படும் மூன்று நக்ஷத்திரங்களில் பிறந்தவருக்கும் சனி அனுஷத்திலும் மூலத்திலும்பயணிக்கும்போது நன்மைகளையும், விசாகத்திலும், கேட்டையிலும் பயணிக்கும்போது தீமைகளையும் தருகிறார்.

புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய மூன்று நக்ஷத்திரங்களில் பிறந்தவர்களுக்கு சனி 



































No comments:

Post a Comment