ஆடி மாத சிந்தனைகள்
மறு பிறவி என்று
ஒன்று உண்டா? இது ஏற்றுக்கொள்ளும் கருத்து தானா?
இப்படி ஒரு கேள்வி
நம் எல்லாருடைய மனதிலும் தோன்றுவதில் வியப்பில்லை. ஒன்றை நாம் சரியாகப்
புரிந்து
கொள்ள வேண்டும். இப்பூவுலகில் வாழும் ஒவ்வொரு ஜீவனுக்கும் இறப்பு என்ற ஒன்று சர்வ
நிச்சயம்.
இறந்த பின்னர் இந்த ஜீவன் எங்கு செல்கிறது? உடல் மட்டுமே எரித்தோ அல்லது
புதைத்தோ
அழிக்கப்பட்டுவிடுகிறது. ஆனால் ஜீவன்? அது எங்கோ பயணம் செய்துதானே ஆக
வேண்டும். இதையே அந்த
ஜீவன் இன்னொரு பிறவி எடுக்கிறது என்கிறார்கள். அதையே மறு
பிறவி என்றும் மீண்டும் மீண்டும்
பிறப்பதை ஜன்மாந்தரம் என்றும் சொல்கிறார்கள். இதை
நமது சாஸ்த்திரங்கள் சொன்னாலும் ஸ்ரீமத் பகவத்
கீதையில் பகவான் சொல்லுவதும் இதை
உறுதி செய்யும் ஒரு உபகரணமாக அமைகிறது.
பகவான் ஸ்ரீ
கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு உபதேசங்கள் செய்யும்போது ஞான யோகம், கர்மயோகம்
பற்றியெல்லாம்
விளக்குகிறார். அர்ஜுனன் ஸ்ரீ கிருஷ்ணனிடம், “பரமாத்மாவே லகுவான ஞான மர்க்கம்
இருக்கும்போது கர்ம மார்க்கம் பற்றி சொல்லி என்னை ஏன் குழப்புகிறீர்கள்” என்று
கேள்வி எழுப்புகிறான்.
அதற்கு பரமாத்மா சொல்லும் பதில் ஒன்று நம் கேள்விக்கும்
விடை சொல்லுகிறது. மூன்றாவது
அத்தியாயத்தில், ஐந்தாவது ஸ்லோகத்தில் பரமாத்மா
சொல்கிறார்,
ந ஹி கஸ்சித்க்ஷணமபி ஜாது த்யஷ்ட²த்யகர்ம க்ருத் Ι
கார்யதே ஹ்யவஸ: கர்ம ஸர்வ: ப்ருக்ருதிஜை கு³ணை: Ι Ι
“சந்தேகமின்றி எந்த
ஒருவனும் எக்காலத்திலும் ஒரு கணம் கூடச் செயல் புரியாமல் இருப்பதில்லை.
ஏனெனில்
மனித ஸமுதாயம் அனைத்தும் ப்ருக்ருதியிலிருந்து உண்டாண குணங்களால் தன்வசமிழந்து
வேறு
வழியின்றி எப்பொழுதும் செயல் செய்யும்படித் தூண்டப்படுகிறது”.
ஆக மனிதர்கள்
இயல்பாகவே செயல் பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இப்படி மனிதர்களால் உடலாலும்,
மனதாலும், வாக்காலும் செய்யப்படும் அனைத்து செயல்களும் தனக்கோ அல்லது மற்றவருக்கோ
நன்மை
செய்யுமானால் அதை புண்ணிய கர்மா என்றும், தீமை செய்யுமானால் பாப கர்மா
என்றும் இரண்டு
வகையாகப் பிரிக்கப்படுகிறது. இந்த புண்ணிய பாவ செயல்களின் பலன்கள்
உடனே ஏற்பட்டுவிடாது. எப்படி
விவசாயத்தில் விளைப்பது ஒரு காலம் என்றும் அறுவடை
செய்வது மற்றொரு காலம் என்றும்
சொல்லப்படுகிறதோ அதுபோல புண்ணிய பாவ செயல்களின்
பலன்களும் வெவ்வேறு காலத்தில்தான்
வெளிப்படும். உணவு தயாரிக்கும் காலமும் அதை
உண்ணும் காலமும் வெவ்வேறு அல்லவா?
சிலர் நம் கண்ணெதிரே
பாப காரியங்கள் செய்தும் சுகமாக இருப்பதைக் காண்கிறோம். அது எதனால்.
இப்பொழுது
செய்யும் பாப காரியங்களின் பலனை அவர்கள் அனுபவிக்கும் காலம் பின்னர்தான் வரும்.
முன்
ஜன்மங்களில் செய்த புண்ணியங்கள் அவரை சுகமாக வைத்திருக்கின்றன என்பதைப்
புரிந்து கொள்ள
வேண்டும். மறு பிறவி என்ற ஒன்று இருந்தால் அல்லவா இப்படி நேரிடும்.
இதை வைத்துத் தான்
சாஸ்த்திரங்கள் மறு பிறவி இருக்கின்றது என்று நமக்கு சொல்லுகின்றன.
“கல் நீ; உளி நீ:
சிற்பியும் நீ” என்ற ஒரு பட்டவர்த்தனமான உண்மை வாக்கியத்தை நமது பள்ளியில்
படித்தேன்.
நாம் நாளை எப்படி வாழ வேண்டும் என்பதை நாம்தான் முடிவு செய்திடல்
வேண்டும்.
அன்புடன்
நாராயணன்
No comments:
Post a Comment