Tuesday, 4 February 2014

எண் கணிதம் மூலம் உங்களைத் தெரிந்துகொள்ளுங்கள். எண் – 6


அனைவரையும் வசப்படுத்தும் சுக்கிரனின் ஆளுமைக்குட்பட்ட எண் தான் 6.

இந்த எண்ணின் ஆதிக்கத்தில் இருப்பவர்கள் அடுத்தவரைக் கவர்ந்து தன் காரியத்தை எளிதில் சாதித்துக் கொள்பவர்கள்.

இவர்கள் அதிகாரம் செய்தல், அடுத்தவரை அடக்கி ஆளுதல், மற்றவரை சந்தோஷப்படுத்தி பொருளீட்டல் அக்கியவற்றில் சாமர்த்தியசாலிகள்.

ஆன்மீகத் துறையிலும் இவர்களைக் காணலாம். இவர்கள் மிகுந்த தைரியசாலிகள். காந்த சக்தி மிகுந்த கண்கள் உடையவர்கள்.

இவர்கள் கலைஞர்களாகவும், கவிஞர்களாகவும், நடிகர்களாகவும் சிறந்து விளங்குவர்.

எதிலும், எப்பொழுதும் சந்தோஷமாக வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள்.

அசுர குருவான சுக்கிரனின் ஆளுமைக்குட்பட்டவர்களாதலால், இவர்கள் மந்திர தந்திரங்களில் தேர்ச்சியும் நாட்டமும் உள்ளவர்கள்.

எந்த செயலையும் நங்கு தீவிரமாக யோசித்து முடிவெடுப்பவர்கள். இவர்கள் பொதுவாக அதிர்ஷ்டமுடையவர்களாக இருப்பார்கள். அழகை ரசிப்பவர்கள். இவர்களுக்கு எப்பொழுதும் வேலையாட்கள் இருப்பர்.

யாருக்கும் எளிதில் பணம் காசு கொடுத்துவிடமாட்டார்கள். அதே சமயம் அழகாகவும், இனிமையாகவும் பேசுவதில் வல்லவர்கள். தன் புகழுக்காக ஓரளவு செலவு செய்வார்கள்.

இவரது வசீகரத் தோற்றம் இவர்களுக்கு பெருமளவில் உதவும். செய் நன்றி மறப்பவர்கள். தன் ஜீவ சக்தியை விரயம் செய்பவர்கள். நல்ல புத்திர பாக்கியம் உள்ளவர்கள்.
இவர்களின் ஜாதகத்தில் சுக்கிரன் நல்ல நிலையில் இருப்பின் இவர்கள் சாந்த குணமுள்ளவர்களாக இருப்பர். பரோபகாரியாகவும் இருப்பர். நிறைய அற்புதங்களைப் புரிபவர்களாக இருப்பர். தன் ஜீவ சக்தியை வீணடிக்க மாட்டர்கள்.

குறைவான பலத்தில் சுக்கிரன் இருப்பின் பருத்த சரீரம் உள்ளவர்களாக இருப்பர். ஆயினும் சுகபோக வாழ்க்கை இருக்கும். மேலான லட்ச்சியங்கள் இராது.

சுக்கிரன் மிகுந்த தோஷத்தில் இருப்பின் சமூக விரோதச் செயல்களை செய்வர். இவர்கள் பேராசை, சூது, நாட்டையே உலுக்கும் மோசமான திட்டங்கள், நண்பர்களிடம் விஸ்வாசமாக இல்லாமல் இருப்பது, அதிக காம இச்சை, பணத்திலேயே குறியாக இருத்தல் போன்ற குணங்களை உடையவராக இருப்பர்.

ஆண்களும் வசீகரமான தோற்றத்துடன் சில சமயம் பெண்களைப் போன்று இருப்பர். சக்தி உள்ள கண்கள், நீண்ட அழகான கேசம், உறுதியான கண்கள், வட்ட வடிவ முகம், நடுத்தர உயரம், மிருதுவான உடல், சரியான அளவுள்ள அங்கங்கள் இருக்கும்.

நீரிழிவு, பிறப்புறுப்பு, இருதயம் போன்ற இடங்களில் துன்பப்படும் வியாதிகள் இவர்களுக்கு ஏற்படும். இவர்கள் இனிப்புப் பிரியர். மிகவும் கவனமாக இருத்தல் அவசியம்.

தர்பூஸ், மாதுளை, பப்பாளி, திராட்சை, ஆப்ரிகாட், வால்நட், பாதாம் போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்ப்பது நலம்.

6 ம் எண்ணில் பிறந்தவர்கள் 6, 15, 24 ம் தேதிகளில் முக்கியமான காரியங்களை செய்வது நலம் தரும்.

இவர்களுக்கு 9, 18, 27 ம் தேதிகள் சாதகமான தேதிகளாகும். 3, 12, 21, 30 ஆகிய தேதிகள் துரதிர்ஷ்டமானவை.

இவர்கள் வியாபாரம், ஆடை ஆபரணம் பொன்றவற்றை விற்பது, நவரத்தினக் கற்களை விற்பது, பெண்கள் பயன்படுத்தும் பொருட்களை விற்பது, வாகனம் வைத்து தொழில் நடத்துவது போன்ற தொழில்களை செய்வது நல்லது.

6 ம் எண்ணில் பிறந்தவர்களுக்கு 3, 6, 9 ம் எண்ணில் பிறந்தவர்கள் உதவி செய்வர். 6 ம் எண்ணில் பிறந்தவரிடம் இவர்கள் மனதைப் பறிகொடுப்பர்.

ஆழ்ந்த பச்சை, ஆழ்ந்த நீலம், நீலம், பச்சை, சிவப்பு கலந்த நிறங்கள் இவர்களுக்கு அதிர்ஷ்டமானவை.

வெள்ளை, மஞ்சள், ரோஸ் இவர்களுக்கு உதவாது.

இவர்கள் மரகதம் அணிவது அதிர்ஷ்ட்த்தைத் தரும்.

வயிற்று நோய் உள்ளவர்கள் ஜேட்(JADE) கற்கள் அணிவது நல்லது. டர்காயிஸ் (Turquoise) கற்களும் அணியலாம்.

பண்டிட் மோதிலால் நேரு, ஜோன் ஆஃப் ஆர்க், தலாய்லாமா, டாக்டர் அப்துல் கலாம், ஸ்ரீ அரபிந்தோ, விக்டோரியா மஹாராணி, மொஹம்மது ரஃபி ஆகியவர்கள் இந்த எண்ணில் பிறந்தவர்களில் சிலர்.

6666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666666

வருகின்ற ஃபிப்ருவரி மாதம் 9 ம் தேதி, சென்னை தி நகர் ஹபிபுல்லா ரோடில் இருக்கும் கர்னாடக சங்க பள்ளியில் காலை 09:30 மணியளவில் ஒரு பிரார்த்தனையுடன் புதிய ஜோதிட வகுப்புகள் ஆரம்பமாகின்றது. விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்:

திரு ராமச்சந்திரன் – 89 39 90 13 46

திரு நாராயணன் – 93 81 71 30 52
நல்ல சந்தர்ப்பம் தவற விடாதீர்கள்

No comments:

Post a Comment