Tuesday, 11 March 2014

எண் கணிதம் மூலம் உங்களைத் தெரிந்து கொள்ளுங்கள் - எண் 8

1 முதல் 9 வரை உள்ள எண்களில் மிகவும் சிரமமான எண் 8 தான்.

பொதுவாக ஜோதிடத்தில் 8 ம் பாவம் என்பது இழப்புகளையும், அவமானத்தையும் குறிக்கும் பாவம் ஆகும்.

கால புருஷ ஜாதகத்தில் 8 ம் பாவம் மற்றும் 11 ம் பாவம் இரண்டும் அதிர்ஷ்டமில்லாத பாவம் என்றே கருதப்படுவது உண்டு.

8 ம் பாவம் என்பது ஒரு எதிர் மறை பாவம் ஆகும். அதுபோல 8 ம் எண்ணும் ஒரு எதிர்மறை எண்ணாகவே கருதப்படுகிறது.

எண் கணித நிபுணர்கள் இந்த 8 ம் எண்ணுக்குரியவரின் அதிர்ஷ்டத்தை சரி செய்வதற்கு நிரம்பவும் சிரமப் படுவார்கள். இந்த 8 ம் எண்ணில் பிறந்தவர்கள் விதி வசத்தால் ஆளப்படுபவர்கள் என்று எண் கணித சாஸ்திரம் கூறுகிறது.

மிகவும் எளிதான ஒரு பரிகாரம் இதற்கு உள்ளது. 8 ம் எண் காரர்கள் 5 ம் எண்ணுடன் தன்னைச் சேர்த்துக்கொண்டால் அல்லது 5 எண்ணுடையவரைத் துணையாகக் கொண்டால், 8 ம் எண்ணின் தீமைகளை எளிதில் வெல்லலாம்.

ஒன்றை நாம் ஞாபகத்தில் கொள்ள வேண்டும்.

இந்த எண்,  சாஸ்த்திரங்களால் இறையருள் பெற்ற எண்ணாக கருதப்படுகிறது.

இந்தக் கருத்து உண்மை என்பதை நிரூபிக்கும் வண்ணம் இந்த எண்ணின் ஆளுமைக்கு உட்பட்டவர்கள் வேதாந்திகளாக இருப்பர்.

உலக வாழ்க்கையை துச்சமாக நினைப்பர். இவர்களில் சிலர் அருள் வாக்கு சொல்பவர்களாக இருப்பர்.

நான் யார் என்கிற தத்துவ விசாரனையில் அதிகமாக ஈடுபடுவார்கள்.

இந்த எண் சனி கிரகத்தால் ஆளப்படுகிறது.

ஜோதிடம் கர்ம கொள்கையின் அடிப்படையில் இயங்குகிறது.

ஒவ்வொருவரும் மூன்று விதமான கர்ம வினைகளால் ஆளப்படுகிறார்கள். அவை சஞ்சித கர்மா, பிராரப்த கர்மா மற்றும் ஆகாமிய கர்மா வாகும்.

சஞ்சித கர்மா என்பது ஒவ்வொரு பிறவியிலும் நாம் சேர்த்து வைக்கும் பாவ புண்ணியங்கள்.

ஆகாமிய கர்மா என்பது நாம் இந்த பிறவியில் செய்யும் பாவ புண்ணியங்கள்.

பிராரப்த கர்மா என்பது நாம் ஒரு பிறவியில் அனுபவிக்கும் நல்ல வினை மற்றும் தீய வினை.

சனி நமது பிராரப்த கர்மாவின் அதிகாரி.

அவர் நீதிமான்.

பாரபட்சமின்றி அனைவரையும் அவரது பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப நல்லதோ அல்லது கெட்டதோ அருளுபவர்.

இந்த கிரகத்தின் ஆளுமைக்குட்பட்டவர் அதனால் தான் விதிவசத்துக்கு ஆட்பட்டவர் என்று சொல்கிறோம்.

8 ம் எண்ணில் பிறந்தவர்கள் என்னதான் புத்திசாலியாக இருந்தாலும் விதியின் வலிமையால் அவர்கள் புத்திக்கப்பாற்பட்ட காரியங்களை செய்யும் படி நேரிடும்.

சிலர் மேன்மையான எண்ணங்கள் உள்ளவராகவும், சிலர் வெளித்
தொற்றத்தில் மேன்மையான எண்ணங்கள் உள்ளவராகவும், உள்ளே தீய எண்ணம் உள்ளவராகவும் இருப்பர்.

அப்படிப்பட்ட இரண்டாவது வகை மக்களை திருட்டு, கொள்ளை அடித்தல், கொலை, விபசாரம், கள்ள உறவுகள் போன்ற விஷயங்கள் கவரும். அப்படிப்பட்டவர்களிடம் ஏதோ ஒன்று இருப்பதாக இவர்கள் நம்புவார்கள்.

இந்த எண்ணில் பிறந்த சில தத்துவ மேதைகள் அவ்வாறு சொல்லியிருப்பதே இதற்கு சான்று.

இந்த எண்ணில் பிறந்தவர்கள் நிறைய பேர்கள் சிறையில் இருப்பதைக் காணலாம்.

இவர்கள் யாரையும் எளிதில் நம்ப மாட்டார்கள். குறைவான நண்பர்களை உடையவர்கள். பகுத்தறிவு மிக்கவர்கள். நிதானமானவர்கள்.

இவர்களுக்கு கிடைக்கும் ஒவ்வொரு வெற்றியும் மிகுந்த போராட்டங்களுக்குப் பின்னர்தான் கிடைக்கும். இவர்கள் 8, 17, 26, 35, 44, 53, 62, 71 , 80 வயதுகளில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இல்லையெனில் பெருத்த அபாயங்கள் இந்த வயதுகளில் ஏற்படலாம்.

1, 4, 8 ம் எண்களில் பிறந்தவர்களிடம் சீக்கிரத்தில் நட்பு பாராட்டுவார்கள்.

உயரமான தோற்றம் உள்ளவர்கள். நீண்ட விரல்கள், நீண்ட முகம் இருக்கும்.

கூர்மையான அதே சமயத்தில் அமைதியற்ற பார்வை இருக்கும். பற்கள் வரிசையாக இருக்காது. தலை மயிர் கட்டையாக இருக்கும்.

பித்த உடல்வாகு உள்ளவர்கள். மலச்சிக்கல், ஆஸ்துமா போன்ற நோய்கள் எளிதில் பிடிக்கும். குடல் நோய் இருக்கும். ரத்தத்தில் விஷம் இருக்கும்.

இவர்கள் புகையிலைத் தொடர்பு, குடிப்பழக்கம்  இருப்பின் அதை உடனே விட வேண்டும்.

எலுமிச்சை பழம் சர்க்கரை இல்லாமல் சேர்த்துக் கொள்வது நல்லது. காரட், முள்ளங்கி, கருணைக் கிழங்கு, அரைக் கீரை மிகவும் நல்லது.

1, 10, 19, 28 தேதிகளில் நன்மை நடக்கும். 4, 13, 22, 31 தேதிகள் சாதகமானவை. 4, 18, 27 தேதிகளும் நன்மை தருபவை. 8, 17, 26 தேதிகள் துரதிர்ஷ்டமானவை.

மஞ்சள் நிறம் மிகவும் உகந்தது. ஆழ்ந்த பச்சையும், நீலமும் நன்மை தரும்.

தனித்திருக்கும் போது நீலமணி அணியலாம். அடுத்தவருடன் சேர்ந்து இருக்கும்போது மஞ்சள் அணிவது நல்லது.

கருப்பு, பாக்கு நிறம், மங்கலான ஆழ்ந்த நிறங்கள், சிவப்பு கூடாது. குற்றமற்ற நீலக்கல் அணிவது நன்மை தரும்.

ஸ்வாமி சிவானந்தர், பரமஹன்ச யோகானந்தர், விக்டர் ஹ்யூகோ ஆகியவர்கள் இந்த எண்ணில் பிறந்தவர்களில் சிலர்.

இந்த எண்ணில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டம் தந்து அருள் புரியும்படி ஆண்டவணை நாம் பிரார்த்திப்போம்.































No comments:

Post a Comment