7 ம் எண்ணுக்கும் மதம் என்ற சொல்லுக்கும் சம்பந்தம் உண்டு. இவர்கள் தன் மதத்தின் மீது மிகுந்த பற்றுடையவர்களாகவும், சாஸ்த்திர சம்பிரதாயங்களில் நம்பிக்கை உள்ளவர்களாகவும் இருப்பார்கள். அதே சமயம் தத்துவ விசாரணைகளில் ஈடுபடமாட்டார்கள்.
இவர்கள் கேதுவால் ஆளப்படுபவர்கள்.
இவர்கள் கண்ணியமானவர்கள்.எளிமையான மற்றும் சுத்தமான ஆடைகளை அணிவர். அவசரப்பட்டு வார்த்தைகளை விடமாட்டார்கள். மற்றவர்களுடன் ஒத்த கருத்தை உடையவர்களாக இருக்கமாட்டார்கள்.
சிலருக்கு அதிகம் முன்கோபம் இருக்கும். தனிமை விரும்பிகள். தன் கஷ்டங்களை அடுத்தவரிடம் பகிர்ந்து கொள்ளமாட்டார்கள். சிலர் கலை, நாடகம் போன்றவற்றில் நாட்டம் கொள்வார்கள். சிலர் கவிஞர்களாகவும் இருப்பர்.
எப்பொழுதும் எதையாவது எதிர்த்துக் கொண்டு இருப்பார்கள். இவர்களது மண வாழ்க்கை அவ்வளவு திருப்திகரமாக இருப்பதில்லை. 7 ம் எண்ணில் பிறக்கும் பெண்களுக்கு அவர்களது அந்தஸ்த்தைவிட அதிகம் அந்தஸ்த்து உள்ள நபருடன் திருமணம் நடக்கும். சிலர் அழகாக இருப்பினும் அங்கங்களின் வளர்ச்சி சிலருக்கு முழுமையாக இருக்காது. கடுமையான உழைப்பாளிகள்.
மனோபலம் மிக்கவர்கள். எதிர்காலத்தைப் பற்றி அதிகம் கவலைப் படுபவர்கள். மற்றவர்களை இவர்கள் பின்பற்றுவதைவிட இவர்களை மற்றவர்கள் பின்பற்றுவது அதிகம். ஒருவித காந்த சக்தி உள்ளவர்கள்.
7 ம் எண்காரர்களுக்கு கனவுகள் எளிதில் பலிக்கும்.
களை பொருந்திய முகம் உடையவர்கள். மலச்சிக்கல் இவருக்கு இருக்கும். வாத நோய்களும், சரும நோய்களும் இவர்களை எளிதில் பாதிக்கும்.
உணவில் அதிக அளவு கீரைகளை சேர்த்துக் கொள்வது நல்லது. லெட்டூஸ், முட்டை கோஸ், முளைக்கீரை, பூசணி, பரங்கி, வெள்ளரிக்காய், வெங்காயம் நன்மை தரும் உணவுகள். எல்லா ரசமுள்ள பழங்களும் நல்லவையே.
இவர்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் செய்யும் காரியங்கள் வெற்றி கிடைக்கும். மேலும் 1, 10, 19, 28 ஆகிய தேதிகள் நன்மை பயப்பவை. 25 ம் தேதிகளில் நன்மையும், 7, 16 ம் தேதிகளில் தீமையும் ஏற்படும். 1, 3 ம் தேதிகளில் பிறந்தவர்களை மணம் புரிவது நல்லது.
வெண்மை இவரைக் கவரும் நிறம். இருப்பினும் இவர்கள் மஞ்சள், வெளிர்பச்சை, வெளிர் நீலம் ஆகிய நிறங்களில் ஆடை அணிவது நல்லது. ஆழ்ந்த வர்ணங்கள் இவர்களுக்கு ஆகாது.
வைடூர்யம் மிகவும் அதிர்ஷ்டமான கல். அதேபோல் முத்து மற்றும் சந்திரகாந்தக் கல்லும் பயன் தரும்.
உலோகங்களில் எதுவும் நன்மை பயக்காது. மண் பாத்திரத்தில் உணவு சமைப்பது நல்லது.
மேரீ க்யூரி, எலிஸபெத் மஹாராணி, சார்லஸ் டிக்கென்ஸ், வில்லியம் வோர்ட்ஸ்வொர்த், சார்லீ சாப்ளின், ஆஸ்கார் வொயில்ட், சர் ஐசக் ந்யுடன் ஆகியவர்கள் 7 ம் எண்ணில் பிறந்தவர்கள்.

வாழ்க வளமுடன்
No comments:
Post a Comment