Monday, 10 March 2014

உங்களுக்குத் தெரியுமா?

நவாம்ச லக்னம் உஙகளது பிறந்த ராசி சக்கரத்தில் லக்னம் எங்கிருக்கிறதோ அந்த வீட்டில் இருந்து நாவாம்சத்தில் எத்தனாவது வீட்டில் இருக்கிறதோ அதற்கு தகுந்தார்ப்போல் ஒரு பலன் உண்டு.

12 ஆவது வீட்டில் இருப்பின் ஜாதகர் கீழ்த்தர எண்ணம் உடையவராகவும் கொடூரமானவராகவும் இருப்பார்.

11 ஆவது வீட்டில் இருப்பின் ஜாதகர் முக்தி பெறும் நிலையில் இருப்பார்.

9 ஆவது வீட்டில் இருப்பின் ஜாதகர் தீராத ஆசை கொண்டவராகவும், உடல் சுகத்தில் நாட்டம் உள்ளவராகவும் இருப்பார்.

7 ஆவது வீட்டில் இருப்பின் ஜாதகர் பாவம் செய்பவராக இருப்பார்.

ஒரு பெண் ஜாதகத்தில் நவாம்ச லக்னத்திற்கு திரிகோண வீடுகளில் சூரியன் இருப்பின் அவள் சீக்கிரத்தில் விதவை ஆவாள்.

ஒரு பெண் ஜாதகத்தில் நாவாம்ச லக்னத்திற்கு மூன்றாம் வீட்டில் சந்திரன் இருப்பின் அவள் சீக்கிரம் விதவை ஆவாள்.


ஒரு பெண் ஜாதகத்தில் நவாம்ச லக்னத்திற்கு அல்லது சந்திரனுக்கு திரிகோணத்தில் புதன் இருப்பின் அவள் மலட்டுத்தன்மை உடையவளாக இருப்பள்.

ஒரு பெண் ஜாதகத்தில் நவாம்சத்தில் லக்னம் அல்லது புதன் இருக்கும் வீட்டின் திரிகோணத்தில் குரு இருப்பின் அவள் தர்ம பத்தினி யாக இருப்பாள்.

ஒரு பெண்  ஜாதகத்தில் நவாம்ச லக்னம் அல்லது சந்திரனுக்கு திரிகோணத்தில் சனி இருப்பின் அவள் ஆண் தன்மை உடையவளாக இருப்பாள்.

ஒரு பெண் அல்லது ஆண் ஜாதகத்தில் லக்னம் அல்லது சந்திரனுக்கு திரிகோணத்தில் ராகு இருப்பின் அவள்/ அவர் பல்வேறு விதமான காரியங்கலை செய்பவராக இருப்பார்.













No comments:

Post a Comment